04th March 2023 22:15:07 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் மற்றும் சிவில் பணியாளர்களின் தெரிவுசெய்யப்பட்ட 22 சிறார்களுக்கு ரூபா/280,000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆதரவுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரியவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வு பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (பெப்ரவரி 25) இடம் பெற்றதுடன், இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களால் 22 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி கேணல் சுஜித் குலசேகர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.