17th March 2023 20:52:38 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மறைந்த போர்வீரர்கள் மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்களின் தலைமையில், எதிலிவெவ பிரதேசத்தில் நிரந்தரமாக காயமடைந்த அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிதியுதவியில் மேலும் புதிய வீடு நிர்மாணித்து ஞாயிற்றுக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நிரந்தர ஊனமுற்ற பயனாளிகளுக்காக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் தமது தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி இந்த வீட்டை நிர்மாணித்தனர்.
திருமதி தனுஷா வீரசூரிய அவர்களினால் வீடு கையளிக்கும் நிகழ்வு சடங்குகள் மற்றும் நாடா வெட்டுதலின் பின்னர் பயனாளிக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.