04th April 2023 18:13:41 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26 மார்ச் 2023) இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்றது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஜா வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்ததுடன், மறைந்த போர்வீரர்கள் மற்றும் சேவையாற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நலன்புரி வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பின் போது எதிர்கால நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்க ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் திருமதி சந்திமா காயத்திரி விஜேசுந்தர அவர்களின் ‘பெண்களுக்காக குரல் எழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் பயனுள்ள விரிவுரையும் இடம்பெற்றது.