19th May 2023 19:56:14 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு கங்கொடவில சுனேத்ரா மகாதேவி பௌத்த நிலையத்தைச் சேர்ந்த வண. உடுபுஸ்ஸல்லாயே சந்திம தேரர் அவர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை (மே 13) இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் தர்ம பிரசங்கத்தை நிகழ்தினார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் ஆசீர்வாதத்துடனும், சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
தர்ம பிரசங்கத்தின் போது, வண. உடுபுஸ்ஸல்லாயே சந்திம தேரர், இராணுவத்தில் சேவையாற்றும் அனைவருக்கும், காயமடைந்தவர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் இராணுவத்தில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினரும் இப் பிரசங்கத்தில் கலந்து கொண்டனர்.