28th August 2023 23:21:18 Hours
இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் இலங்கை இராணுவ மகளிர் படையணியுடன் இணைந்து அனைத்து நிலையினரினதும் நலன் கருதி சமையல்/ பேஸ்ட்ரி மற்றும் மலர் அலங்காரம் தொடர்பான பயிற்சி பட்டறையை அண்மையில் நடாத்தியது.
கல்கிசை ஹோட்டல் சமையல் அலுவல்கள் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் தேசபந்து கலாநிதி பபிலிஸ் சில்வா, கேக் வடிவமைப்பாளர் திருமதி நிமகோ டி சில்வா மற்றும் செக்கன்ட் சான்ஸ் மலர்சாலை உரிமையாளர் தலைவர் திரு.சுமிந்த பெரேரா ஆகியோரால் இந்த செயலமர்வில் விரிவுரைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு விரிவுரையின் முடிவிலும், பங்கேற்பாளர்கள் நடைமுறை அமர்வுகளில் பங்கேற்றனர்,
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர இது தொடர்பில் முன்னெடுப்புகளை மேற்கொண்டார். மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறுப்பினர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.