29th August 2023 18:16:46 Hours
இராணுவத் தலைமையகத்தின் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் தகுதியான இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களின் பிள்ளைகளின் நலனுக்காக மேலும் ஒரு நலத்திட்டத்தை திங்கட்கிழமை (ஓகஸ்ட் 28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன்,இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆலோசனையின் பேரில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இருவரும் இராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கினர்.
இதன் போது, களனிப் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைத் தொடரும் சிவில் ஊழியர் ஒருவரின் மகளுக்கு டேப்லெட் கணனி வழங்கப்பட்டது. மருத்துவப் காரணங்களால் ஓய்வுபெற்ற விஜயபாகு காலாட் படையணி போர் வீரரின் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரும் மகனுக்கும் இதே விழாவில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
நீரிழிவு நோயால் கால் துண்டிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர் ஒருவரது பொருளாதார சிரமத்தை கருத்தில் கொண்டு செயற்கை கால் ஒன்று வழங்கப்பட்டது.
புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சீ ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.