Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th July 2022 17:33:44 Hours

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையரால் இலங்கை சமிக்ஞைப் படையணியினருக்குச் ஆலோசனை செயலமர்வு

இராணுவ வீரர்களின் உளவியல் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன், 2022 ஜூன் 30 அன்று பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் ஆலோசனை திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்களின் மேற்பார்வைின் கீழ் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷஷிகா ஹேரத் அவர்களினால் ஆரம்பித்து வைத்ததுடன், இலங்கை சமிக்ஞைப் படையணியினரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு ‘வாழ்க்கையின் மன அழுத்தம்’ என்ற தலைப்பில் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

வளவாளர், உளவியலாளர், கெப்டன் விஷ்மிகா டி சில்வா அவர்களினால் விரிவுரை நடாத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவ சமிக்ஞை படையணிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் 42 அமைப்புகள் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் விரிவுரையில் இணைந்து கொண்டனர்.