01st September 2022 16:31:25 Hours
அண்மைய இராணுவ பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சமிக்ஞைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்திய காயமடைந்த ஏழு போர்வீரர்களின் உணர்வுகளை மேலும் உயர்த்துவதற்காக, இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு அண்மையில் இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் அவர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்கியது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஜேஏ சஷிகா ஹேரத் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அங்கவீனமான போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.