04th September 2022 21:17:51 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் தலைமையிலான இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விஜயமாக, பாங்கொல்ல ‘அபிமன்சல-3’ நல விடுதிக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.
வருகை தந்தவர்களை ‘அபிமன்சல-3’யின் தளபதி கேணல் அருண விஜேகுணவர்தன வரவேற்றார். இந்த விஜயத்தின் நோக்கம் காயமடைந்த போர் வீரர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதும் அவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதுமே ஆகும்.
'அபிமான்சல-3' நல விடுதியில் காயமடைந்த 35 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைப் பராமரிப்பில் இருப்பதுடன், அவர்களுக்கு இந்த விஜயத்தின் போது சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. வீரர்களுக்கு பரிசுகளும், விடுதிக்கு அத்தியாவசிய உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அனைத்து பார்வையாளர்களும் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் இசை நிகழ்ச்சியில் ஆடிப்பாடி மாலையைக் கழித்தனர்.