07th September 2022 17:10:26 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொது கூட்டம் இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையக வளாகத்தில் 28 ஓகஸ்ட் 2022 ம் திகதி இடம் பெற்றது. இக் கூட்டத்தில் 'வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயம்' என்ற தலைப்பில் மாகந்துறை விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி பிரியங்கா திஸாநாயக்க விரிவுரையை நிகழ்த்தினார்.
35க்கும் மேற்பட்ட இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கூட்டத்தின் போது அவர்களின் நலன்புரிப் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக விவாதித்தனர்.