07th September 2022 17:13:56 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு தனது நலன்புரிக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை (26) பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி விளையாட்டு மைதானத்தில் வர்த்தக கண்காட்சியை நடத்தியது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் அவர்கள், பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக இலங்கை சமிக்ஞைப் படையணியில் சேவையாற்றும் அனைத்து நிலையினருக்கும் உணவுப் பொருட்கள், செடிகள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பல வகை பொருட்களை சலுகை விலையில் ஒரே இடத்திலிருந்து கொள்வனவு செய்யும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து வர்த்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.