14th December 2022 22:46:56 Hours
பனாகொட அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்ற இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டத்தின் போது இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களான திருமதி சமந்திகா பிரதாபசிங்க மற்றும் திருமதி மெனுகா ஒபேசேகர ஆகியோரின் பிரியாவிடை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கை இராணுவத்தின் உளவியலாளர் கெப்டன் விஷ்மிகா டி சில்வா அவர்கள் ‘மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஆற்றிய பெறுமதியான விரிவுரையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பின்னர், தலைவி விருந்தினர் விரிவுரையாளருக்கு சிறப்புப் பாராட்டுச் சின்னமும், சேவை வனிதையர் பிரிவின் பிரியாவிடை பெற்றவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களும் வழங்கினார்.