14th December 2022 22:55:17 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத்தின் ஆலோசனையின் பேரில், முல்லேரியாவிலுள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் விடுதி எண் 5 க்கு இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) விஜயத்தை மேற்கொண்டனர்.
வருகைக்கு முன்னதாக, இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் சுமார் ரூ. 30,000/= மற்றும் மருத்துவமனை தளபாடங்கள் மற்றும் விடுதியில் உள்ள மாற்றீடுகளின் அத்தியாவசிய பழுதுபார்ப்புகளை மேற்கொண்டதுடன் சமிக்ஞை படையணியின் உதவியுடன் விடுதி கட்டிடத்தை முழுமையாக சுத்தம் செய்தனர்.
இவ் விஜயத்தின் போது வைத்தியசாலை நோயளர்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.