14th December 2022 23:00:55 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 18) தலுகான சமிக்ஞை குடும்பத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவருக்கு புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் முதுகுத் தண்டில் கடுமையான நரம்பு பாதிப்பு சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள பயனாளியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேவீஎ கொடிகார அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானம் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் நலம் விரும்பிகள் இத் திட்டத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கினர்.
நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட உறுப்பினர்கள், 2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், மற்றும் பயனாளியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.