13th January 2023 18:24:12 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 பனாகொடயில் உள்ள இலங்கை சமிக்ஞைப் படையணியின் கேட்போர் கூடத்தில் கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்வை நிகழ்த்தினர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் அவர்களால் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சமிக்ஞை பாடகர் குழுவும் அதன் இசைக்குழுவும் இணைந்து இசை நிகழ்வை வழங்கினர்.
பல திகைப்பூட்டும் மற்றும் கண்ணைக் கவரும் நடன அம்சங்கள் நிகழ்வை வண்ணமயமாக்கின.
இந் நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கரோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.