14th February 2023 22:10:34 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் புதன்கிழமை (பெப்ரவரி 08) பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் மஹாரகம அபேக்ஷா மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷஷிகா ஹேரத் அவர்களால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் விருப்பத்துடன் இரத்தம் வழங்கினர். அபேக்ஷா மருத்துவமனையின் இரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் இந் நிகழ்வுக்கு உதவியை வழங்கினர்.