Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th March 2023 09:34:30 Hours

சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் இராணுவ வீரருக்கு புதிய வீடு

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நல திட்டத்தில் 2 (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் முதுகுத் தண்டில் நிரந்தர நரம்பு சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிப்பாய் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணித்ததுள்ளது.

இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகம் மற்றும் 2 (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமை சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் நிதி உதவியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து பொலன்னறுவை தலுகானாவில் இந்த புதிய வீட்டை நிர்மாணிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவியான திருமதி ஷஷிகா ஹேரத், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பணிபுரிந்த காலத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்தார். திங்கட்கிழமை (பெப்ரவரி 27) இப் புதிய வீட்டின் திறப்பு அடையாளமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் படையினரால் , 2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேவீஎ கொடிகார அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளம் வழங்கப்பட்டது.

2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் பல கிராம மக்கள் ஆகியோருடன் திருமதி ஷஷிகா ஹேரத் பிரதம அதிதியாக வீடு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.