23rd August 2023 23:25:10 Hours
திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக தம்புலு ஹல்மில்லேவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 22) சமய ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.