23rd August 2023 23:05:01 Hours
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஹிமாலி புஸ்ஸல்ல அவர்களின் கருத்துப்படி இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையின் சேவை வனிதையர் பிரிவிற்கு நிதி திரட்டும் நோக்கில் புதிய யோகட் உற்பத்தித் திட்டத்தை செவ்வாய்கிழமை (ஓகஸ்ட் 15) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதியும், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். புதிய உற்பத்தி நிலையத்தைத் தொடங்குவதற்கு முன் அவர் பதாதையைத் திரை நீக்கம் செய்தார்.
அதன்பின், புதிய பதப்படுத்தும் ஆலையை பிரதம அதிதி உன்னிப்பாக பார்வையிட்டதுடன், அதேவேளை திருமதி ஹிமாலிபுஸ்ஸல்ல அவர்கள், பதவியேற்கும் சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களுக்கு பொறுப்புகளை கையளித்தார்.
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.