31st March 2023 10:10:36 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையக கேட்போர் கூடத்தில் வீட்டுத்தோட்டம் மற்றும் சமையல் எனும் தலைப்பில் செயலமர்வு இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, திருமதி நளினி ரத்நாயக்க அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேல்மாகாண விவசாய திணைக்களத்தின் வளவாளர்களின் பங்களிப்புடன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சுயதொழில் மூலம் அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வேலையற்ற வாழ்க்கைத் துணைகள் இச் செயலமர்வில் பயனடைந்ததுடன், பயிலரங்கில் பங்கேற்க முடியாத சிப்பாய்களின் மனைவிமார் சூம் தொழில்நுட்பம் மூலம் தங்கள் விழிப்புணர்வை பெற்றுக் கொள்ள வசதிகளும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.