17th April 2023 12:48:03 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மல்லிகா விஜயசுந்தர தலைமையில் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 04) கம்புருபிட்டிய ‘அபிமன்சல - 2’ நலன் விடுதிக்கு விஜயம் செய்தனர். இவர்களை 'அபிமன்சல - 2' தளபதி வரவேற்றார். இந்த விஜயத்தின் நோக்கமானது மாற்றுத்திறனாளியான போர்வீரர்களின் தரத்தை உயர்த்துவதும் அவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதும் ஆகும்.
ஆரோக்கிய விடுதி மாற்றுத்திறனாளி அதிகாரிகள்/சிப்பாய்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிகிச்சை பராமரிப்பு வழங்குகிறது.
விஜயத்தின் போது, அனைத்து போர்வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.