18th April 2023 22:31:27 Hours
இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தின் சேவை வனிதையர் பிரிவு, சமிக்ஞை பிரிகேட், இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகம், அனைத்து படையணிகள், இலங்கை சமிக்ஞை படையணி பாடசாலை மற்றும் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் கிளைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது தலைமையக விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்கிழமை (11) புத்தாண்டு வர்த்தக சந்தையை நடாத்தியது.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க, பிரதான சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சந்தையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். புத்தாண்டு அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் விற்று, இலங்கை சமிக்ஞை படையணியின் நலன்புரிப் பாத்திரங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக நடாத்தப்பட்ட இந்த வர்த்தகக் சந்தையில் உணவுப் பொருட்கள், உடைகள், கன்றுகள், கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான புத்தாண்டு பொருட்கள் காணப்பட்டன.
சந்தை முழுவதும் இலங்கை சமிக்ஞை படையணியின் இசைக்குழுவான ‘வேவ்ஸ்’, பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கியது.
மேலும், அனைத்து இலங்கை சமிக்ஞை படையணியில் சேவையாற்றும் 44 சிவில் ஊழியர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இலங்கை சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க மற்றும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க ஆகியோர் இந்த விநியோகத்தில் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.