11th June 2023 20:44:41 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி நளினி ரத்நாயக்க அவர்களின் ஆலோசனையின் பேரில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் பாயாசம் வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அங்கத்தவர்கள் ஏற்பாடு செய்தனர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க, இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையரால் இத்திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்குபற்றினர்.