14th June 2023 11:04:32 Hours
2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 20 மே 2023 இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையக அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்றது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க, செயற்குழு மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களினால் தீபம் ஏற்றி அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அவைத் தலைவி இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் நோக்கங்களை எடுத்துரைத்து, இராணுவத்தினரின் மனைவிகளுக்கு அதிகாரம் அளித்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை மேம்படுத்த கிளை உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இறுதியாக, செயலாளர் நன்றியுரை ஆற்றி அன்றைய நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்டனர்.