p class='textalign'>விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவு தனது சமூகம் சார்ந்த நலச் சேவைகளில் ஒன்றாக பலப்பிட்டியில் உள்ள அனுலாவிஜேராம சிறுவர் இல்லத்தில் உள்ள அனாதை பிள்ளைகளுக்கு மதிய உணவு விருந்தை (ஓகஸ்ட் 01) செவ்வாய்க்கிழமை விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி படையினரின் உதவியுடன் வழங்கியது.
p class='textalign'>அதே நேரத்தில், விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கலிப்சோ இசைக்குழுவினரால் பிள்ளைகள் மகிழ்விக்கப்பட்டன. விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி 2 குடிநீர் சுத்திகரிப்பு அலகுகளையும் பரிசாக வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) படையினரால் சிறுவர் இல்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
p class='textalign'>இந் நிகழ்வில் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.