08th March 2022 17:31:42 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் அரலகங்வில விவசாயப் பயிற்சிப் பாடசாலையில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர அவர்களின் ஒருங்கிணைப்புடன் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் அறுவடை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் “தாய்நாட்டிற்கு சுபீட்சம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமதி சாந்தி அபேசேகர கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, “ஸ்வயஞ்சத எல் வீ” எனப்படும் பாரம்பரிய நெல் பயிரை 3 (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரியிடம் நாற்று நோக்கங்களுக்காக வழங்கினார்.