12th July 2023 09:23:58 Hours
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்கள், பல சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் புதன்கிழமை (ஜூலை 5) அத்திடிய மிஹிந்து செத் மெதுர புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலம் குறித்து விசாரிப்பதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விஜயத்தின் போது, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, மிஹிந்து செத் மெதுர வளாகத்தில் நடைபெற்று வரும் நிர்மானப் பணிகளுக்குப் பயன்படும் ஒரு அவசர விளக்கு மற்றும் பல சீமெந்து பக்கற்றுக்களையும் வழங்கினார்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினால் தலா ரூபா 2000.00 பெறுமதியான காசோலை ஊக்கத்தொகையாக அனைத்து போர்வீரர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.