03rd January 2022 12:53:10 Hours
இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் 2021 டிசம்பர் 29 அன்று இலங்கை பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் 14 வது தலைவியாக திருமதி மிஹிரி ஹேரத் அவர்கள் பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை இலங்கை பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள்அன்புடன் வரவேற்றனர்.
சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத்பிரித்’பராயணங்ளுக்கு மத்தியில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.புதிய தலைவி படையணியின் போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந் நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும, பிரதி நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வு கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடைப்பெற்றது.