06th January 2022 08:38:07 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 2021 டிசம்பர் 21 அன்று மத்தேகொட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை பொறியியல் படையணிசேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமி அமரசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அலுவலகப் பணியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், வரவேற்பு உரையை திருமதி அமரசேகர அவர்கள் ஆற்றினார்.
2021 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட நலன் மற்றும் சமூக செயல்பாடுகளை விளக்கும் ஆவணப்படம் காணொளியாக திரையிடப்பட்டதுடன், நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
வருடாந்த பொதுக் கூட்டம் ஆனது, சேவை வனிதையர் பிரிவு, பொறியியல் படையணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் வருடாந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன் விழா நிறைவடைந்தது.
கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நிகழ்ச்சி நடைபெற்றது.