27th February 2022 20:02:08 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால்சமையல் தேவைகளுக்கு மாற்றுத் தீர்வைக் காணும் நோக்கில் சிரட்டை கரியைப் பயன்படுத்தக் கூடிய அடுப்பினைநிர்மாணித்துள்ளனர்.
அவ் அடுப்புக்களை நிர்மாணிக்கும் விழா பெப்ரவரி 14 அன்று இரத்மலானையில் அமைந்துள்ள 4 வது (தொ) இலங்கைபொறியியல் படையணி தலைமையகத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிதிருமதி மிஹிரி ஹேரத்,சிரேஷ்ட சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.