05th July 2023 23:05:48 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்களின் ஆலோசனையின் பேரில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்கொல்லை 'அபிமன்சல 3' நலன்புரி நிலையத்திற்கு வியாழக்கிழமை (ஜூன் 29) அன்று விஜயம் செய்து மாற்றுத் திறனாளி போர்வீரர்களின் நலம் விசாரித்தனர்.
இந்த விஜயத்தின் போது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், போர் வீரர்களுடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டதுடன், அவர்களது குடும்ப விவகாரங்கள் மற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அனைத்து போர் வீரர்களுக்கும் பரிசுப் பொதிகளை வழங்கி அவர்களுடன் தேநீர் விருந்திலும் கலந்துக் கொண்டனர். காலிப்ஸோ இசைக் குழு அங்கு வசிக்கும் போர் வீரர்களை மகிழ்வித்தது.
இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், தலைமையக பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.