17th May 2022 08:17:13 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (7) இடம் பெற்றது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் திருமதி தீபிகா சிந்தாமணி வீரதுங்க தலைவியாக தெரிவு செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.