06th June 2022 13:11:56 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் புத்தாண்டை முன்னிட்டு 8 ஏப்ரல் 2022 தொம்பேகொட, ஹொரணையில் உள்ள இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் தலைமையகத்தில் பணியாற்றும் 19 சிவில் ஊழியர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா சிந்தாமணி வீரதுங்க அவர்கள் அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுகள் மற்றும் சுகாதாரத் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார். பிரிகேடியர் ஜிஏ முனசிங்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த விநியோகம் இடம்பெற்றது.