22nd June 2022 15:26:48 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் போய தினத்தை முன்னிட்டு களனிகம 'தர்மச்சக்கர' சிறுவர் இல்லத்தின் 28 சிறுவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணம் மற்றும் அழகுசாதனப் பொருட்களை வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் படையினர் அனாதை இல்லத்தை விளக்குகள் மற்றும் ஏனைய பொருட்களால் அலங்கரித்தனர்.
அன்பான வரவேற்புக்குப் பிறகு நிர்வாகத்தினர், பெண்களின் நன்கொடைக்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்தனர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா சிந்தாமணி வீரதுங்க, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.