21st December 2022 23:36:19 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பண்டதுனி மார்கரெட் ரணசின் ரணவக்க அவர்கள், 2022 டிசம்பர் 10 ஆம் திகதி அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுர நல விடுதியில் உள்ள போர்வீரர்களை சேவை வனிதையர் பிரிவினருடன் பார்வையிட்டார்.
'மிஹிந்து செத் மெதுர போர்வீரர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்குவதற்கு முன், ஒரு சிறப்பு தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் போது மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் நலனுக்காக ‘மிஹிந்து செத் மெதுர’ நிர்வாகத்திற்கு எல்இடி தொலைக்காட்சி ஒன்றை பரிசாக வழங்கினர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்ச்சி திட்டத்தில் பங்குபற்றினர்.