18th February 2023 16:36:55 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர், 2 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 12) அனுராதபுரம் சாலியபுரத்தில் உள்ள 'சதுட்ட' சிறுவர் இல்லத்தின் அனாதை பிள்ளைகளுடன் ஒரு நாளைக் கழிக்கும் வகையில் அவர்களின் மாதாந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
நிகழ்விற்காக படையினரால் 2-3 நாட்களுக்கு முன் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. இல்லத்தில் வசிக்கும் 28 பிள்ளைகளுக்கு 'பேர்ல் ரிக்ஷா' கலிப்ஸோ குழுவுடன் ஒரு பொழுதுபோக்கு இசை நிகழ்வில் இணைவதற்கு முன் பரிசுகள் மற்றும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரவின் தலைவி திருமதி பந்துனி ரணவக்க மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், உறுப்பினர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.