12th March 2023 09:26:39 Hours
வெயங்கொடை இராணுவ ஆடைக் தொழிற்சாலையில் சேவையாற்றும் படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த 54 பிள்ளைகளுக்கு இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினரின் அனுசரணையில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
படையினரின் 54 பிள்ளைகளையும் இராணுவ ஆடைத் தொழிற்சாலைக்கு வரவழைக்கப்பட்டு இந்த உதவி புதன்கிழமை (8 மார்ச் 2023) வழங்கப்பட்டது. இராணுவ ஆடைத் பெதழிட்சாலையின் தளபதி லெப்டினன் கேணல் ஆர்ஏசி ரூபசிங்க அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்கு இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் தளபதி தனது ஆசிகளை வழங்கினார். இலங்கை இராணுவ ஆயுதத் தொழிற்சாலையின் தளபதி மற்றும் பிரதித் தளபதி, திருமதி திரு. ஆர்ஏசி ரூபசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.