Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th July 2023 00:01:02 Hours

இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சிறுவர்கள் இல்லத்திற்கு பரிசுகள்

மீகொட மகாபோதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பனவற்றை இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

தேநீர் வழங்களுக்கு பின்னர் பொழுதுபோக்கு நிகழ்வுகள் காணப்பட்டதுடன், முதலாவது இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதி, நிலைய தளபதி மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

இந் நிகழ்ச்சியில் பெண்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.