17th August 2023 20:09:02 Hours
சுகாதார நலன்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணரும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நில்மினி பெர்னாண்டோ ஆகியோரின் முயற்சியின் பேரில், முதலாவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் தலைமையகமான வெரஹெரவில் தனது புதிய மூலிகை கஞ்சி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற விழாவின் போது திறக்கப்பட்டதுடன் இந் நிலையத்தில் மூலிகை கஞ்சிகள் மற்றும் பாயசம் உட்பட அனைத்து வகையான கஞ்சிகளும் விநியோகிக்கப்படுகின்றன.
இந் நிகழ்வில் முதலாவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.