30th March 2022 09:01:11 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள், பெண் அதிகாரிகள், பெண்கள் சிப்பாய்கள், சிப்பாய்களின் மனைவியர் மற்றும் பல அழைப்பாளர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு விரிவுரை நடாத்தப்பட்டது.
பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) உளவியல் ஆலோசகர் திருமதி துலானி பாக்யா தேசப்பிரிய அவர்கள் விரிவுரையை ஆற்றியதுடன், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.