17th May 2022 08:13:47 Hours
முல்லைத்தீவு, சிலாவத்தை பிரதேச லதானி சிறுவர் இல்லத்தின் ஆதரவற்ற சிறுவர்களுக்கு 6 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, சேவை வனிதையர் பிரிவின் அனுசரணையுடன் செவ்வாய்க்கிழமை (3) பரிசுப் பொதிகளை வழங்கியது.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு திருமதி இனோகா இளங்ககோன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், நிகழ்வின் நினைவாக குழு புகைப்படம் எடுத்ததுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. இந்த திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.