24th July 2022 20:30:54 Hours
இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவு 'பெண்கள் ஒழுக்கப்பணி கழகம் 6 ஜூலை 2022 பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தலைமையகத்தில் அவசரமாக இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் வழங்கும் நோக்கத்துடன் இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்வில் 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையினர் முன்னிலை வகித்ததுடன். 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்த தானம் செய்தனர்.
இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன், சில சேவை வனிதையர் பிரிவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றியடைய செய்தார்.