16th November 2022 15:18:06 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் அவர்கள் முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களின் ஒத்துழைப்புடன் செவ்வாய்க்கிழமை (8) கர்ப்பிணிப் பெண்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கினார்.
காங்கேசன்துறையை தளமாகக் கொண்ட 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவையாற்றும் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வின் போது தலா ரூ. 6,750 பெறுமதியான 10 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்களுக்கு அதே சந்தர்ப்பத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது.
4 வது இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஎன் இந்திரஜித் அவர்களின் படையினர் நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைத்துடன், கட்டளை அதிகாரி நிகழ்வை மேற்பார்வையிட்டார்.