30th December 2022 08:10:25 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக படையினரின் 34 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் பரிசுப் பொதிகளை நாரஹேன்பிட்டிய இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கியது.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் மற்றும் இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது படையணியின் சிப்பாய்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கொண்ட 34 பொதிகள் வழங்கப்பட்டன.
முதலாவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வின் போது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கலிப்சோ மற்றும் பீட் இசைக்குழு கிறிஸ்மஸ் பாடல்களை இசைத்ததுடன், நிலைய தளபதி, பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.