25th March 2023 10:26:49 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினரின் ஒருங்கிணைப்புடன் 10 மார்ச் 2023 படையணி தலைமையகத்தில் பௌத்த பெண் துறவிகளுக்கு தானம் வழங்கப்பட்டதுடன், அன்றைய தினத்தின் முக்கியதுவம் தொடர்பில் விரிவுரையும் நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் மற்றும் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் தலைமையில் சிப்பாய்கள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், மாதிவெல சங்கமித்தா மடாலயத்தில் வசிக்கும் 10 பௌத்த பெண் துறவிகளுக்கு அன்னதானம் வழங்கினர். இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் அழைப்பின் பேரில் கலாநிதி கல்பனா அம்பேபிட்டிய அவர்களால் "பெண்கள் வலுவூட்டல்" என்ற தலைப்பில் விரிவுரை நடாத்தப்பட்டது.