24th April 2023 19:09:17 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 6 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையினர் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் கூட்டுத் திட்டமாக 8 ஏப்ரல் 2023 அன்று நாரஹேன்பிட்டி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிப்பாய்கள், சிவில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பழக்கூடைகள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன்,இலங்கைஇராணுவ பொலிஸ் படையணியின் நிலையத் தளபதி, 6 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.