15th August 2023 23:58:41 Hours
இராணுவத் தலைமையக இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) இராணுவ தலைமையகத்தில் சேவையில் உள்ள வீரர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அந்த நிவாரணப் பொதிகளை விநியோகித்தார்.
இந் நிகழ்வில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, திருமதி ஜானகி லியனகே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஎஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்பீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே சமயம், இராணுவ வீரர் ஒருவரின் மகளுக்கு உயர்கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில், கற்றல் தேவைக்கு தேவையான டேப் கணினியை பரிசாக வழங்க இராணுவ தளபதி அழைக்கப்பட்டார். சேவை வனிதையரால் இப்பரிசுக்கான நன்கொடை ஒருங்கணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிவாரணப் பொதியும் தினசரி தேவைகள் மற்றும் பொதியிடப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கியது. இந் நிகழ்ச்சியில் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.