11th August 2023 04:22:50 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புனர்வாழ்வின் கீழ் அவர்களின் தார்மீக உணர்வுகளை உயர்த்தும் நோக்கத்துடன் புதன்கிழமை (ஓகஸ்ட் 09) பங்கொல்ல 'அபிமன்சல - 3' க்கு விஜயம் செய்தார்.
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் கலிப்சோ இசைக்குழுவினரால் அவர்களை மகிழ்விக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றதுடன், நிகழ்ச்சியின் போது, நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்களுக்கு பரிசுப் பொதிகளும், நீர் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் போர்வீரர்களின் நீச்சல் தடாகத்தை சுத்தப்படுத்துவதற்கு தேவையான பொருட்களையும் தலைவி அவர்கள் பரிசாக வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் நிர்வகிக்கப்படும் காகித மறுசுழற்சி திட்டத்தையும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி பார்வையிட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் தலைவி, போர் வீரர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டு அவர்களின் படைப்பு திறன்களைப் பற்றி உயர்வாகவும் பேசினார்.
இந் நிகழ்ச்சியில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.