29th January 2023 13:04:29 Hours
12 இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவ குடும்பத்தினருக்கு உதவும் வகையில் 'ஆடு வளர்ப்பு' தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தை பனாகொட இலங்கை இராணுவ பொறியியல் படையணி கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 23) முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர தலைமையில் இந்த செயற்றிட்டம் இடம்பெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் அறிவுறுத்தலின்படி, இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவு மற்றும் அதன் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய அனுசரணையுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கடந்த இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பான காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், 17 இராணுவ குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அடையாள ஒப்பந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
அன்றைய நிகழ்ச்சியின் நிறைவில் திருமதி லக்மாலி தர்மவன்ஷ நன்றியுரையை நிகழ்த்தியதுடன் அன்றைய பிரதம அதிதிக்கு இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.நிகழ்வில் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பந்துல பண்டார, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், ஆதரவளித்த ஏனைய படையணிகளின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.