10th March 2023 08:47:25 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவு, எம்ஆர் சொல்யூஷன் வறையறுக்கப்பட்ட தனியார் உடன் இணைந்து புதன்கிழமை (மார்ச் 08) பனாகொடை இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் விசேட மகளிர் தின நிகழ்ச்சியை நடாத்தியது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இலங்கை சமிக்ஞைப் படையணியின் கேட்போர் கூடத்திற்கு வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்கள் வரவேற்றார்.
மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர், அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.நிகழ்வின் முதல் பிரிவாக, அழகுக் கலாசாரத்தில் நிபுணரான திருமதி காந்தானி பண்டார அழகுக் கலாசார விஞ்ஞானம் பற்றிய விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.அடுத்து, சிங்கர் இலங்கை பீஎல்சியின் பிரதிநிதிகள் அதிகாரிகள் கூட்டாக மின்சாரப் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் பாவனை தொடர்பான பொருளாதார அம்சங்களைப் பற்றிய உரையை நடாத்தினர்.இந்நாளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுகாதார முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சுருக்கமான விரிவுரைகள் தொடர்ந்து நடைபெற்றன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு தையல் பயிற்சியைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் சிப்பாய்க்கு உதவித் தொகையை வழங்கியது. இத்தேர்வு குளுக்கள் முறையின் மூலம் தேர்வு நடந்தது.306 சீ-1 லயன்ஸ் கழக மகளிர் மன்றம் இராணுவ சேவை வனிதையர் பிரிவுக்கு 5 ஜூக்கி தையல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியது, அதனை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களால் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர், 'ஜீவிதய அரன்' இசைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்சியானது பார்வையாளர்களை மகிழ்வித்தது.306 சீ-1 லயன்ஸ் கழக மகளிர் மன்றம் மற்றும் எம்ஆர் சொல்யூஷன் வறையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் அழைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கியதை அடுத்து, நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய அனைவருக்கும் விசேட பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிர்வாகச் செயலாளரின் நன்றியுரை அன்றைய நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தது.பிரதான வைபவம் நிறைவடைந்த பின்னர், பனாகொடை இராணுவ அழகு நிலையத்தில் சேவையாற்றும் பெண் சிப்பாய்களுக்காக அமைக்கப்பட்ட புதிய தங்குமிட வசதியை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் திறந்து வைத்தார்.இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் இணைப்பாளர், திருமதி. சமந்தி செனரத் யாப்பா, திருமதி மனோரி சலே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.